ஒன்பதாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் எற்படும் பலன்கள்

ஒன்பதாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வம், மக்கட்பேறு, உறவினர் ஏற்படும் இறைபற்று மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்களை தூற்றுபவர், மிகுதியான தாகம் (நீர்வேட்கை) உள்ளவர்.

ஒன்பதாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இறைசெயல் மற்றம் பக்தியுடையவர், செல்வம், மக்கட்பேறு, அனைவரிடம் பணிவுடன் நடத்தல், எல்லோருக்கும் விருப்பமானவராக இருத்தல்.

ஒன்பதாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

தீய செயல்களை செய்தல், எவருக்கும் விருப்பமில்லாதவர், உயிர்கொலையில் நாட்டமுள்ளவர், தர்மமின்மை, கூடுதல் பாவர், அரசால் கிடைக்காத கௌரவம் உடையவர்.

ஒன்பதாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மிகுதியான செல்வமும், கல்வியும், நல் ஒழுக்கமும், திறமையாக பேசுதலும், திறன் படைத்தவரும், தர்மம் அறிந்தவரும் ஆவார். நல்ல பண்பாளராகவும் இருப்பார்.

ஒன்பதாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இறைசெயல் மற்றம் மூதாதையர்களுக்கு செய்யும் சடங்குகளில் பற்றுள்ளவர், புலவர், பெருஞ்செல்வம் உடையவர், அமைச்சர் அல்லது படைதலைவராவர், மரியாதைக்குரியவர்.

ஒன்பதாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

சாமுத்திரிகா லட்சன குணமுள்ள உடலமைப்பு உள்ளவர், வரவு, செலவு, சமமாக பேணுபவர், பெண்களிடம் இன்பம், உறவினர் உள்ளவர், இறைவன், குரு, விருந்தாளிகளை வணங்குபவர், பெருந்தன்மை உடையவர்.

ஒன்பதாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

தனது தர்மம், பொது தர்மம் இவை இரண்டையும் செய்யாமை, குறைந்த செல்வம் உடையவர், மக்கட்பேறும், உடன்பிறப்பும் இல்லாதவர், இன்பம் இல்லாதவர், பிறர் மனிதர்களை துன்பபடுத்தி சுகம் அனுபவிப்பவர்.

ஒன்பதாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

சாதகமாகவும், இனிமையாகவும் பேசமாட்டார். தனது இனம் அல்லது ஊருக்கு தலைமை ஏற்பார். பெயர், புகழ் அடைவார்கள். தவறான செயல்கள் புரிவார்.

ஒன்பதாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பாவ வழியில் செல்பவர், தீய செயல் புரிபவர். தந்தை அற்றவர். அதிர்ஷ்டம் இல்லாதவர். கோபமும், வெறுப்பும் உடையவர் நல்லவர்களை அவதூறாகப் பேசுபவர்.

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)