சூரியன் 4 முதல் 6 பாவம் வரை உள்ளபலன்

சூரியன் 4 முதல் 6 பாவம் வரை உள்ளபலன்
4
ஹீநாங்க:-அஹங்காரி- ஜனவிரோதி உஷ்னதேஹி- மந: பீடவான்- துவாம்த்ரிசத்வர்சே சர்வகர்மானுகுலவான்-பகுபிரதிஷ்டாஸித்தி: சத்தாபதவிஞானசௌர்யசம்பன்ன:- தனதான்யஹீன: பாவாதிபே பலயுதே- ஸ்வக்ஷேத்ரேத்ரிகோனே கேந்த்ரே லக்ஷனாபேக்ஷயா ஆந்தோலிகாப்ராப்தி: பாபயுதே பாபவீக்ஷனவசாத் துஷ்டஸ்தாநே தூர்வாஹநஸித்தி: க்ஷேத்ரஹீன: பரக்ருஹ ஏவ வாச:


உடல் உறுப்பு குறைபாடு, செருக்குள்ளவர், பொது மக்களுக்கு எதிரானவர், உஷ்ண தேகம் உடையவர், குழப்பமானவர்.32 வயதில் வெற்றியாளராக, புகழ் உள்ளவராக, கற்றவராக உயர் பதவி அடைந்து, வலிமை, மரியாதை, மதிப்பு பெற்று வாழ்வார். ஆனால் பொருளாதாரம் ஏற்றம் இருக்காது.
4-ம் அதிபதி ஆட்சி, உச்சம், சமம், கேந்திரம், திரிகோணத்தில் சுப பார்வையுடன் இருந்தால் உயர்தர வாகனங்கள் கிடைக்கும். 4-ம் அதிபதி தீய கோள் பார்வை பெற்றால் அல்லது சேர்க்கை பெற்றால் அல்லது 3, 6, 8, 12 ல் அமைந்தால் மோசமான வாகனம் கிடைக்கும். சொந்த வீடு அமையாது. வாடகை வீடுதான் அமையும்.

5

நிர்தன:-ஸ்தூலதேஹி- ஸப்தமே வர்ஷே பித்ராரிஸ்டவான்-மேதாவி-அல்பபுத்ர-புத்திமான்-பாவாதிபே பலயுதே புத்ரஸித்தி-ராஹுகேதுயுதே ஸர்பசாபாத் சுதக்ஷய:- குஜயுதே சத்ருயுதே மூலாத்-சுபத்ருஷ்டயுதே ந தோஷ: சூர்யசரபாதிஷு பக்த:-பலயுதே புத்ரசம்ருத்தி:


சூரியன் 5-ல் இருந்தால் ஜாதகர் வறியவர். பருத்த உடல் உடையவர். அவரது 7-ம் வயதில் ஜாதகரின் தந்தை மரணத்தையோ, கடுமையான நோயையோ சந்திப்பார் ,
அறிவாளி, குறைவான குழந்தைகள் உள்ளவர். 5 ம் அதிபதி வலுவடைந்து நல்ல இடங்களில் அமர்ந்திருந்தால் குழந்தைகள் உண்டு. ஆனால் ராகு, கேதுவோடு சூரியன் இணைந்தால் சர்பதோஷத்தினால் குழந்தைகளை இழப்பர். சூரியன், செவவாயோடு இனைந்தால் எதிரிகளால் குழந்தைகளை இழப்பார். நற்கோள்கள் பார்வை செய்தால் தோஷமில்லை. சூரிய வழிபாடு செய்பவர். சூரியன் பலமாக அமைந்தால் குழந்தைகள் வ்ருத்தி உண்டு..

6
அல்பக்ஞாதி சத்ருவ்ருத்தி-தனதான்ய சம்ருத்தி-விம்சாதிவர்ஷே நேத்ர வைபரீத்யம் பவதி-சுபத்ருஷ்டயுதே ந தோஷ: அஹிகாநந பாரக்ருந்மந்த்ரசேவீ-கீர்திமான் சோகரோகி-மஹோஷ்னதேஹி-சுபயுதே-பாவாதிபே தேஹாரோக்யம்-ஞாதிசத்ருபாஹுத்யம்-பாவாதிபே துர்பலே சத்ருநாச:-பித்ருதுர்பல:

ஜாதகர் உறவினர்களை வெறுப்பவர். எதிரிகள் அதிகம். செல்வந்தர். 20 ம் வயதில் கண்நோயினால் பாதிப்பு, ஆனால் நற்கோள்களினால் பார்வைசெய்தால் கண்நோய் பாதிப்பு இல்லை. காடுகளில் அலைந்து திரிபவர். மந்திர உச்சாடனம் செய்வதில் ஆர்வம் உள்ளவர். புகழ் உள்ளவர். மன நிம்மதி அற்றவர், உஷ்ன தேகம், 6-ம் அதிபதி சுபர் தொடர்பு பெற்றால் ஆரோக்கியமான உடலமைப்பு உண்டு. நிறைய நண்பர்களும் எதிரிகளும் உண்டு.6 ம் அதிபதி பலமற்றால் எதிரி அழிவார், தந்தையின் உடல் நலம் பாதிக்கும்.

One comment to சூரியன் 4 முதல் 6 பாவம் வரை உள்ளபலன்

  • talk  says:

    well don Talkastro

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)