தாம்பூலப் பிரஸ்னம்

வெற்றிலை இந்திர லோகத்தில் உண்டானது. இதற்கு நாகவல்லி என்ற பெயரும் உண்டு. ஆருடம் பார்க்க வருபவர், தாம்பூலம் கொண்டு வந்தால், தாம்பூல ஆருடம் பார்க்கலாம். ஆருடம் பார்க்க வருபவர் வெற்றிலை மட்டும் கொண்டுவந்து “பாக்கு” கொண்டு வராவிட்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்காது என்று பொருள்.

தாம்பூலத்தின் நுனியில் மகாலட்சுமி வாழ்கிறாள்.
தாம்பூலத்தின் மத்திய பாகத்தில் சரஸ்வதி வாழ்கிறாள்.
தாம்பூலத்தின் காம்பில் மூத்ததேவி (மூதேவி) வாழ்கிறாள்.
தாம்பூலத்தின் பின்பக்கம் மத்திய பாகத்தில் விஷ்ணு வாழ்கிறார்
தாம்பூலத்தின் பின்பக்கம் மத்தியின் வலது பாகத்தில் பார்வதி வாழ்கிறாள்.
தாம்பூலத்தின் பின்பக்கம் மத்தியின் இடது பாகத்தில் சிவன் வாழ்கிறார்
தாம்பூலத்தில் முழுவதும் காமதேவன் வாழ்கிறார்

ஆரூடம் கேட்க வந்தவரால் கொண்டு வந்து கொடுக்கப்பட்ட வெற்றிலையைக் கொண்டு பலன் சொல்ல வேண்டும். அப்படி கொடுத்த வெற்றிலைகள் எண்ணிக்கையை பத்தால் பெருக்கி கிடைக்கும் எண்னுடன் ஒன்றை கூட்டி சேர்த்து கிடைத்த மொத்த எண்ணிக்கைகளை 7ஆல் வகுத்தால் வரும் மீதி தொகையை முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று கிரகங்களின் வரிசைப்படி கொடுத்த எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கிரகத்திற்கு தாம்பூல கிரகம் என்று பெயா;. அந்த தாம்பூல கிரகம் நிற்கும் ராசியை தாம்பூல ஆருட லக்னமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மீதி வராவிட்டால் சனியை தாம்பூல கிரகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாம்பூல ஆருடத்திற்கு நேரக்கட்டுப்பாடும் கிடையாது. இரவு, பகல் எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம்.

வெற்றிலையில் எந்த பாவம் வாட்டமில்லாமல், துவாரம் இல்லாமல், கீரல் இல்லாமல் இருக்கிறதோ அந்த பாவத்திற்கு உயர்வைச் சொல்ல வேண்டும். எந்த வெற்றிலை மேற்படி குறை உள்ளதோ அந்த பாவத்திற்கு அசுபம் சொல்லலாம்.
ஆரூடம் கேட்க வருபவர் பகல் உச்சி வேளைக்குள் (12 மணிக்குள்) வந்தால் அவர் கொண்டு வந்த வெற்றிலையை மேலிருந்து எடுத்து முதல் வெற்றிலையை லக்னமாகக் கொண்டு 12 வெற்றிலைக்கு மட்டும் பலன் சொல்ல வேண்டும். நடுப்பகல் 12 மணிக்கு மேல் வந்தால் வெற்றிலையை அடியிலிருந்து எடுத்த முதல் வெற்றிலையை லக்னமாக கணக்கிட்டு 12 வெற்றிலைக்கு மட்டும் பலன் சொல்ல வேண்டும்.

உதாரணமாக முதல் வெற்றிலையான லக்ன வெற்றிலையை விட எட்டாவதுவது வெற்றிலை பெரியதாக இருந்தால் அற்ப ஆயுள் என்று பலன் அறியலாம். சம்பாத்தியத்தைக் குறிக்கும் இரண்டாம் வெற்றிலையை விட பன்னிரெண்டாவது வெற்றிலை பெரியதாக இருந்தால் வரவை விட செலவு அதிகமாக இருக்கும்.

வெற்றிலையின் நுனி சிதைந்து போய் இருந்தால் அந்தப் பகுதிக்கு உண்டான இடம் தோஷப்பட்டிருக்கிறது எனஅறியலாம். எந்த பாவத்தைக் குறிக்கும் நுனி சிதைந்து உள்ளதோ அந்த பாவத்திற்கு உண்டான காரஹங்களுக்கு கெடுதல் உண்டு

வெற்றிலையின் எண்ணிக்கை 24க்கு மேல் இருந்தால் தாம்பூல பிரஸ்ன பார்க்க வந்தவர் பூர்வீகத்தை விட்டு வந்து இரண்டு தலைமுறை ஆகிறது என்று கூறலாம். 36க்கு மேல் இருந்தால் மூன்று தலைமுறை என்றும் இப்படியாக கணக்கிட்டு கூறவேண்டும்

தாம்பூலத்தில் கிழிசல் இருந்தால் பூர்வீக சொத்து, மூதாதயருக்கு செய்யவேண்டிய கடமைகளில் தோஷம் உள்ளது எனலாம். இதற்கு பாதகாதிபதி தொடர்பை கணக்கில் கொண்டு பலன் சொல்ல வேண்டும்.

தாம்பூலத்தின் நடுவில் துவாரங்கள் இருந்தால் துர்மரணம் அடைந்த ஒரு ஜீவன் அவர் குடும்பத்தில் இருக்கிறது. அதாவது தூக்கிலோ, இடிவிழுந்தோ, மாடியிலிருந்து அல்லது மரத்திலிருந்து விழுந்தோ இறந்த ஜீவன் உள்ளது எனஅறியலாம்.

கீழ்பக்கம் (காம்பு இருக்கும் பக்கம்) பெரிய நரம்பு அருகில் துவாரம் இருந்தால் கர்ப்பிணிப் பெண் (பூரண கர்ப்பிணி) மரணம் நிகழ்ந்து இருக்கும்.

வெற்றிலையில் ஏதாவது தூசி ஒட்டிக் கொண்டு (அதாவது துடைத்தால் நீங்கிவிடும்படியாக) இருந்தால் பிரச்சனை வந்து சரியாகிவிடும்.

தாம்பூலப் பிரச்னத்தில் ஜோதிடரிம் கொடுத்த வெற்றிலைகளுக்கு மட்டுமே பலன் காண வேண்டும் ஜோதிடரிடம் கொடுத்தது போக மேலும் பையிலோ கையிலோ வைத்திருக்கும் வெற்றிலைக்கு பலன் கூற கூடாது

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)