நான்காம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

நான்காம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர் அற்றவர், வாகன சுகம் இல்லாதவர், மனதில் துன்பம், தந்தை, செல்வம் மற்றும் வீட்டிற்கு தீங்கு செய்பவர், தீய குணமான தலைவன் (அ) அரசனை வணங்குதல்.

நான்காம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர்கள், வீடுகள், அதற்குண்டான பொருட்கள் மற்றும் வாகனங்கள் உள்ளவர், தானம், தர்மம் செய்தல், பெண்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல், மிகுதியான இன்பமும், துன்பமும் இல்லாதவர்.

நான்காம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர்கள், வீடு, செல்வம், வாகனம், மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் இல்லாதவர், மிகுதியான துன்பமுள்ளவர், குடும்பத்தை விடுத்து பிறர் வீட்டில் வசிப்பவர்.

நான்காம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பண்டிதர், பெருஞ்செல்வம், வாகனம், பற்பல பொருட்களும், உறவினர்களும் உள்ளவர், சோதிட அனுபவம் உள்ளவர், ஒவ்வொரு நாளும் படிப்படியாக முன்னேறி கொண்டே இருப்பர்.

நான்காம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர்கள், வீடு மற்றும் அதற்கேற்ற பொருட்கள், வாகனங்கள், இன்பம், அறிவு, அனுபவ இன்பம், செல்வம், தலைவராகுதல் போன்ற பலன்களும், பகைவர்களை வெற்றி கொள்ளும் தன்மையும் ஏற்படும்.

நான்காம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

நல்ல நண்பர்கள், உறவினர்கள், வாகனம், புகழ், செல்வம், அதிர்ஷடமுள்ளவர், ஏழ்மை இல்லாதவர்.

நான்காம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர் இல்லாதவர், வீடு, வாகனம், செல்வம், திறமை, இன்பம் ஆகிய இவை இல்லாதவர், மனதில் துக்கம் உடையவர், இளமையில் நோயினால் பாதிப்பு உள்வர், நகங்களையும், உடலில் மயிர்களையும் வளர்ப்பவர், சுகமற்றவர்.

நான்காம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அறிவற்றவர், துக்கம் உடையவர், குறைவான ஆயுள் கொண்டவர், மகிழ்ச்சி இல்லாதவர்.

நான்காம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்
:
நிலம், வாகனம், தாய், மகிழ்ச்சி எல்லாம் பாதிப்படையும். தன்னிடம் விட்டு நீங்கி, வெளி இடத்தில் பிறர் தயவில் வாழ்பவர்.

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)