பன்னிரெண்டாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

பன்னிரெண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உடலில் ஊனம், ஒரு கண்ணிற்கு, பாதிப்பு ஏற்படும், தாழ்மையுணர்வு, மலட்டு பெண்ணின் கணவர், தந்தைக்கு பகைவர், வலிமையற்றவர், தாழ்ந்த எண்ணம் குணமும் நிறைந்தவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

எல்லோராலும் தூற்றப்படுபவர், தாழ்ந்த எண்ணம் உடையவர், கருமியாக இருப்பவர், கண்நோய், எதிலும் பற்றின்மை, உடல் ஊணம், வேறுமனிதரின் மகனாயிருத்தல் (தத்து பிள்ளை), அன்றாட செயலால் குறைவுடன் மற்றும் சோம்பலுடன் இருத்தல்.

பன்னிரெண்டாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

கண்நோய், கண்களுக்கு கெடுதி ஏற்படுதல், ஒதுக்கப்பட்டவர், பெண்ணை வெறுப்பவர், நட்பாகி பின்னர் பகைகொள்ளுபவர், கொடூரன், செயல்களால் தோல்வி தழுவுதல், சிறைசாலை வாழ்க்கை அனுபவித்தல்.

பன்னிரெண்டாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

நன்றாக தெளிவுடைய வார்த்தையை பயன்படுத்துதல், தோல்வி உள்ளவராகவும், சில வித்தை உடையவராகவும், பல துக்கங்களும் சோம்பலும், நோயும் உள்ளவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

சோம்பலுடையவர், தகுதியற்ற மக்களால் ஒதுக்கப்படுதல், அனைவரையும் தூற்றுபவர், கண்டித்து பேசுதல், அனைத்து இடத்திலும் சேவை செய்யும் எண்ணம் கொண்டவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செயலாற்றவதில் சோம்பல், இன்பம் அனுபவித்தல், ஒதுக்கப்படுதல், விதவை பெண்களோடு கூடி சுகம் பெறுபவர், பலவகை உணவு உண்பவராகவும், கட்டில் மெத்தை போன்ற நல்ல வசதியுள்ள பொருட்களை சேகரிப்பவராகவும், பெண்களுக்கு அஞ்சுபவராகவும் இருப்பவார்.

பன்னிரெண்டாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உடலில் ஊனம், ஒதுக்கப்பட்டவர், கூடுதலாக பேசுபவர், ஒரேமாதிரி கண்களற்றவர், தயவு தாட்சியமற்றவர், கூச்சமில்லாதவர், தேவையில்லாமல் பணத்தையும், பொருட்களையும் கூடுதலாக செலவு செய்பவர், மிகுதியான மன குழப்பம் உடையவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இரகசியமாக தீய செயல்கள் செய்பவர். அதிகமாக செலவழிப்பார். நீரால் ஏற்படும் ஞிஸிளிறிஷிசீ எனும் உடல் வீக்கம் தரும் நோய் உள்ளவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இரகசியமாக தீய செயல்கள் புரிபவர். அதற்காக பணம் செலவழிப்பவர். செல்வம் அழிவு, தீய நடத்தை, கண் நோய் உள்ளவர்.

One comment to பன்னிரெண்டாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

  • talk  says:

    good

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)