பல திருமண அமைப்பிற்கான ஜோதிட குறிப்புகள்

பல திருமண அமைப்பிற்கான ஜோதிட குறிப்புகள்

 

லக்னத்திற்கு ஏழாம் பாவம் களத்திரஸ்தானம் என்பர். ஜாதகருக்கு வாய்க்கும் வாழ்க்கைத்துணைவர் எப்படிப்பட்டவர்? அவரது அழகு. குணம் சேர்ந்து வாழும் தன்மை, ஆயுள் போன்றவற்றையும் அறியலாம். வாழ்க்கைத் துணைவருக்கு தோஷம் ஏற்படுமா என்பதையும் தெளிவுபடுத்தும் பாவம் இதுவாகும்.

 

ஜாதகரின் உணர்ச்சியின் தன்மை மிகுதியா. குறைவா? அல்லது அளவுடன் உள்ளவரா? போக சுகத்தை எத்ககைய முறையில் அனுபவிப்பார்? வாழ்க்கைத் துணைவருடன் சேர்ந்து வாழ்வாரா அல்லது பிரிய நேருமா என்பதையும் அறியலாம்.

 

ஜாதகருக்கு நண்பர்களின் சேர்க்கை எத்தன்மை வாய்ந்தவர்களாக இருப்பவர். ஜாதகருக்கு வாய்க்கும் மருமகன்களின் குணநலன்களின் எப்படி எம்பதையும் ஏழாம் பாவம் கொண்டு உணரலாம்.

 

சுற்றத்தாருடன் நெருங்கி சுமகமுடன் வாழ்வாரா அல்லது பிரிந்து வாழநேருமா என்பதையும் உணர்த்தும். மோசமான கிரஹ சேர்க்கைகள் கொடுக்கும் பலனானது பரந்த நோக்கம், சிற்றின்ம்பபிரியர்களாக, பலரோடு பழகும் மனப்பான்மை கொண்டவர்களாக, பலரோடு இணைய விருப்பம் உள்ளவர்களாக, சகல இன்பங்களையும் போகங்களையும் அனுபவிக்க விருப்பமுடையவர்களாக இருப்பார்கள். இந்த நிலையால் அவர்கள் வாழ்வு, கௌரவம் பாதிக்கப்படும் தொல்லைகள், தொடரும்.  அதற்கான கிரஹ நிலை

 

 

1.         வலிமையான சந்திரன் மற்றும் சுக்கிரன் சேர்ந்திருந்து 7ம் பாவம் அல்லது 7ம் அதிபதியுடன் தொடர்பு

2.         வலுவான சுக்கிரன் 7ம் வீட்டை பார்த்தல்.

3.         2 மற்றும் 12ம் அதிபதிகள் 3ம் வீட்டில் அமர மேற்படி 2 மற்றும் 12ம் அதிபதிகளை குரு அல்லது 9ம் அதிபதி பார்த்தல்.

4.         7,11ம் அதிபதிகள் இனைந்து 5 அல்லது 9ம் வீட்டில் இருத்தல்.

5.         7,11ம் அதிபதிகள் சேர்ந்திருத்தல் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுதல்.

6.         7ம் அதிபதியாக சனியாகஅமைந்து அசுபருடன் சேர்க்கை பெறுதல்.

7.         7ம் வீட்டில் வலுவான கிரஹங்கள் அமைந்திருக்க, அவர்களை 7ம் அதிபதி பார்த்தல், வலுவான கிரக எண்ணிக்கைப்படி தொடர்புகளை உண்டு பண்ணும்.

8.         8ம் வீட்டில் சுப பலத்துடன் எத்தனை கிரஹங்கள் உள்ளதோ அத்தனை தொடர்புகள் ஏற்படும்.

9.         7,11ம் அதிபதிகள் சேர்ந்து உபய ராசியில் இருந்தால் ஜாதகர் பல தொடர்புகள் உடையவராவர்.

10.       சுக்கிரன் 7ல் சர ராசியிலல்லது சர நவாம்சையில் இருந்தாலும் சுபருடன் கூடி சுபாம்சத்திலிருந்தாலும் இரண்டு தொடர்பு ஏற்படும்.

11.       கடகத்தில் சுக்கிரனிருந்து 7ல் சந்திரன் இருந்தாலும் அல்லது 7லுள்ள சந்திரனுடன் கூடி சுக்கிரனிருந்தாலும் இரு தொடர்பு உண்டு.

12.       6ல் செவ்வாயும், 7ல் ராகுவும், 8ல் சனியுமிருந்தால் எத்தனை திருமணமானாலும் எல்லா வாழ்க்கை துணையும் பிரச்சினையே

13.       2,4,7,8,12ல் செவ்வாய் சுக்கிரன் இருந்து சுக்கிரன் பலஹீனமாக இருந்தால் இருதொடர்பு ஏற்படும்.

14.       இரண்டாமிடத்திலாவது, 7&ழிலாவது பாபரிருந்து அல்லது பாபர் பார்த்து 2,7&ம் அதிபதிகள் பலஹீன ராசியில் அமர இரு தொடர்புஉண்டாகும்.

15.       சந்திரனுக்கு ஏழில் செவ்வாய், ராகுவோடு கூடி இருந்தால் மேற்படி செவ்வாய் சிம்ம நவாம்சத்திலிருந்தாலும் மூன்றாம் தசையில் முதல் தார நாசமும், நான்காம் தசையில் மறுதாரமும் ஏற்படும்.

16.       ஏழாமிடத்தில் சூரியனிலிருந்து ஒராமதிபதியும் கூடியிருந்தால் மறுதார மேற்படும்.  5ல் இவர்கள் இருந்தாலும் இவ்வாறே நடக்கும்.

17.       சுக்கிரன் பதினொன்றில் இருந்து சூரியன், புதனும் 11ல் இருந்தால் இரண்டு தொடர்புஏற்படும்.

18.       7மிடத்தில் ராகு&கேது அமைவதால் தார தோஷம்.

19.       2ல் ராகு&கேது சுபர் பார்வையின்றி அமைதல்.

20.       7ல் சூரியன், சுக்கிரன் இருந்து, சப்தமாதிபதி 12ல் அமைவது.

21.       8ல் செவ்வாய் அசுப சேர்க்கை பெற்றிருத்தல்.

22.       1,4,7,10&க்குரிய கேந்திராதிபதிகள் 4,7,10ல் இடம் மாறி அமைவது மற்றும், அசுபர் சேர்க்கை, அசுப கிரக பார்வை, ஸ்தான பலஹீனம், போன்ற தன்மைகளும் மறுமணத்தை உண்டு பண்ணுகின்றன.

23. அகஸ்தியர் அருளிய கேரள ஜோதிடம்

 

எத்தனை கிரகம் ஏழில் என்னவே சுங்க வேண்டும்

பெற்றிடும் கிரகம் தன்னைப் பேணியே திரினயச் சொல்லப்

பத்திடும் உச்சக்கோள்கள் தன்னையும் பரிந்து பார்த்து

ஒத்தநல் திரியாம் என்றே உரைக்கலாம் அறிந்துபாரே.

 

ஏழாமிடத்தில் எத்தனை கோள்கள் இருக்கின்றனவோ அத்தனை தொடர்புகள் என்று சொல்ல வேண்டும்.  சுக்கிரனோடு எத்தனை கோள்கள் இருக்கின்றனவோ அத்தனை தொடர்புகள் என்று சொல்ல வேண்டும்.  ஒரு சாதகத்தில் உள்ள உச்ச கோள்களையும் பார்த்து தொடர்புகள் பற்றி சொல்ல வேண்டும் என்றவாறு  இப்பாடலில் குறிப்பிடபட்டுள்ளது.

 

 

One comment to பல திருமண அமைப்பிற்கான ஜோதிட குறிப்புகள்

  • swaminathan  says:

    Agasthiyar song quoted that they will have many relationships those who have how many planets in 7 th place and how many planets are together with sukran. Explain that?

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)